சுடச்சுட

    

    சிதம்பரம் பேராசிரியர் வீடு மீது தாக்குதல் சம்பவம்: 3 பேர் கைது

    By சிதம்பரம்,  |   Published on : 09th December 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் மூவரை நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

    சிதம்பரம் கனகசபை நகர் 2-வது மெயின்ரோட்டில் வசிப்பவர் பூ. ராஜமன்னன் (52). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல இயற்பியல் பிரிவு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இவரது வீடு தாக்கப்பட்டது. கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 10-க்கும் மேற்பட்டோர்

    உருட்டுக்கட்டையால் ஜன்னல் கதவுகள் மற்றும் பொருள்களை உடைத்தனர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரையும் உருட்டுக் கட்டையால் தாக்கி உடைத்து சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், கணேசன், சந்திரமோகன், ராஜா, பஞ்சர் பன்னீர்செல்வம் மற்றும் சிலர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் பஞ்சர் பன்னீர்செல்வம் (59), மனோகர் (48), பாலிஷ் நடராஜன் (42) ஆகிய மூன்று பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

    எதிர்தரப்பினர் மீதும் வழக்கு: அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வீட்டை பதிலுக்கு பதில் தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (22), கங்கவடங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (26), அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், அன்புமணி, செந்தில்நாதன் ஆகிய

    5 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு காளிமுத்து, பழனிவேல் ஆகிய இருவரை நகர போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai