Enable Javscript for better performance
சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.34 கோடிக்கு சமரசத் தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.34 கோடிக்கு சமரசத் தீர்வு

    By சிதம்பரம்  |   Published on : 09th December 2014 03:35 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.34 கோடிக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.

    சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு, இலவச சட்ட உதவி மையம் சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சிவில், ஜீவனாம்சம், மோட்டார் வாகனம், குற்றவியல் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் வழக்குகளில் சமரசம் செய்யப்பட்டு 6 கோடியே 33 லட்சத்து 84 ஆயிரத்து 153 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற விழாவுக்கு வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான ஏ.ராதிகா தலைமை வகித்துப் பேசினார்.

    கூடுதல் மாவட்ட நீதிபதி கிங்கிலி கிருஸ்டோபர் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் வழக்கு நடந்து முடிந்து தீர்ப்பு கூறுகையில் ஒருவருக்கு வெற்றியும், ஒருவருக்கு தோல்வியும்தான் கிடைக்கும். ஆனால்

    மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டு இருவருக்கும் வெற்றி கிடைத்து மகிழ்ச்சியாக செல்கிறார்கள்.

    விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. எனவே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வழக்கினை சமரசம் செய்து கொள்ள வேண்டும் என நீதிபதி கிங்கில் கிருஷ்டோபர் தெரிவித்தார்.

    விழாவில் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிமன்ற நீதிபதி சி.சுரேஷ்குமார், குற்றவியில் நடுவர் எண்-2 நீதிமன்ற நீதிபதி பி.மருதுபாண்டி, வழக்குரைஞர் சங்கங்களின் தலைவர்கள் அன்பழகன், பாண்டியன் ஆகியோர் பேசினர். மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர்கள் அஸ்வத்துராமன், தேவதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai