சுடச்சுட

  

  திட்டக்குடி கோயில் ஆக்கிரமிப்பு: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

  By கடலூர்,  |   Published on : 09th December 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் திருக்குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக திட்டக்குடி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் நியமித்த நீதிமன்ற ஆணையரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  கடலூர் மாவட்டம், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் திருக்குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கோயில் செயல் அலுவலர் திட்டக்குடி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் வழக்குரைஞர் தங்க.கொளஞ்சிநாதனை நீதிமன்ற ஆணையராக நியமனம் செய்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி உத்தமராஜா உத்தரவிட்டார்.

  இதனையடுத்து வழக்குரைஞர் தங்ககொளஞ்சிநாதன் வெள்ளிக்கிழமை திட்டக்குடி நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

  அதில், திருக்குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் நிலஅளவை செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை அகற்றி, திருக்குளத்தை தூர்வாரி, தண்ணீரை நிரப்பி பக்தர்கள் நீராட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  திருக்குளத்தில் கட்டடம், கடைகள் கட்டுவதற்கு அனுமதியளித்த அல்லது அதனை கண்டுகொள்ளாமல் கடமை தவறிய கோயில் நிர்வாக அலுவலர், குடிநீர் இணைப்பு வழங்கி அதற்கு கட்டணம், சொத்து வரி வசூல் செய்யும் பேரூராட்சி செயல் அலுவலர், மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய பொறியாளர்கள் மீதும், பட்டா வழங்கிய வட்டாட்சியர் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கும், அப்போது பாதுகாப்பு தர காவல் துறையினருக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai