சுடச்சுட

    

    நச்சுக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுக் கூட்டம்

    By விருத்தாசலம்,  |   Published on : 09th December 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலத்தில் நச்சுக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    விருத்தாசலம் பெரியார் நகரில், நகராட்சி சார்பில் நச்சுக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் ப. அருளழகன் தலைமையேற்று, நச்சுக் கழிவுகளால் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்துப் பேசினார்.

    கூட்டத்தில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், சிவப்பிரகாசம், பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், அனைத்து வீடுகளிலும் உள்ள நச்சுக்கழிவு தொட்டிக் குழாய்களில் வலை கட்டும் பணியில் நகராட்சி

    ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai