சுடச்சுட

  

  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் திங்கள்கிழமை வழங்கினார்.

  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தலைமை ஏற்றார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை

  மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

  கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் 15 திருநங்கைகளுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை, தாட்கோ மூலம் பெட்டிக்கடை வைக்க 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம், பார்வை இழப்பு தடுப்பு இயக்கத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு கண் கண்ணாடி, ஆட்சியரின் தன் விருப்புரிமை நிதியிலிருந்து மாற்றுத் திறனாளி பழனிவேலுக்கு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை ஆட்சியர் சுரேஷ்குமார் வழங்கினார்.

  சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவையொட்டி பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற கட்டுரை, கவிதை, நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கடலூர் மாவட்ட கிரீன் கிராஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சுப்பிரமணியன், சமூக நலத்துறை அலுவலர் புவனேஷ்வரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஜவகர்லால், சுற்றுலா அலுவலர் தமிழரசி, தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் பாலாஜி மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai