சுடச்சுட

  

  பணிப் பாதுகாப்பு கோரி கருப்பு பேட்ஜ் அணிய ஆசிரியர்கள் முடிவு

  By சிதம்பரம்  |   Published on : 09th December 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அளவில் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புத் தேவை என வலியுறுத்தி புதன்கிழமை (டிச. 10) பள்ளிக்கு செல்லும்போது கருப்பு பேட்ஜ் அணிந்து செல்வது என ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

  இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (தலைவர் வே.மணிவாசகம்), அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் (தலைவர் ஆர்.ராஜேந்திரன்), அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு (தலைவர் பெருஞ்சித்திரன்), இணைச் செயலாளர்கள் ரா. காவியச்செல்வன், மு.ஆ. தமிழ்க்குமரன், தமிழக பட்டதாரி ஆசிரியர் கழகம் (எஸ்.ராஜேந்திரன்), தமிழாசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம் ஆகியவை கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.

  இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தெரிவித்தது: ஆசிரியர்கள் சமூக அக்கறையுடன் தொலைநோக்கு பார்வையில் பணியை சேவையாக கருதி பணியாற்றி வருகின்றனர்.

  ஆனால் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

  மாணவர்களுக்கு கற்பித்தல் மட்டும் என்று நின்று விடாமல், மேலும் வாழ்க்கை வழிமுறைகளான ஒழுக்கம், நன்னெறி ஆகியவைகளை போதிக்கும் கடமையும், பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

  மாதா, பிதா, குரு என மூன்றாவது நிலையில் மதிக்கத்தக்க நிலையில் இருக்கும் எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நிலவுகிறது. எனவே ஆசிரியர்களுக்கு பள்ளியில் பணிப் பாதுகாப்பும், மேலும் மாணவர்களின் நலன் கருதியும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai