Enable Javscript for better performance
பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே ஆண் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே ஆண் சடலம்

    By கடலூர்  |   Published on : 09th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |    |  

    திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடம் ரயில்வே பாலம் பகுதியில் திங்கள்கிழமை மாடு மேய்க்கச் சென்றவர்கள் அப்பகுதியில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதை கண்டனர். பின்னர், பெண்ணாடம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    பெண்ணாடம் உதவி ஆய்வாளர் ஆசைதம்பி விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த நபர் ரயில்வே எல்லைக்குட்டபதால் அதுகுறித்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளித்தார். அதன் பேரில் விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் ஆரஞ்சு நிற கட்டம் போட்ட வெள்ளைச் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். அவர் யார்?

    எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai