சுடச்சுட

  

  கணவரிடம் கோபித்துச் சென்ற தனது மகளை காணவில்லை என தந்தை நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  பண்ருட்டி வட்டம் அகரம் எழுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் (50). இவரது மகள் கிரிஜா (26). இவருக்கும் நடுவீரப்பட்டு சேர்க்கான்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்கும் 12.9.2012-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சனிக்கிழமை தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய கிரிஜா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிரிஜாவின் தந்தை வரதன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீஸார்

  விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai