சுடச்சுட

  

  மாநிலப் போட்டிக்கு புனித வளனார் மாணவர்கள் 114 பேர் தேர்வு

  By கடலூர்,  |   Published on : 09th December 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்க கடலூர் புனித வளனார் பள்ளி மாணவர்கள்

  114 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

  2014-15-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, மற்றும் சிவகங்கையில் பல்வேறு நாள்களில் நடைபெறுகிறது. முன்னதாக இப்போட்டிகளில் கடலூர் மாவட்டம் சார்பாக பங்கேற்பதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

  இதில், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 114 பேர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றனர்.

  இதன்படி, பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளில் கையுந்து பந்து, கோ-கோ, டென்னிஸ் அணியில் இருந்து 25 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

  குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டியில் கையுந்து பந்து, கோ-கோ, கூடைப்பந்து, வளைகோல் பந்து, கைப்பந்து, பீச் வாலிபால் அணிக்காக 70 பேர் தேர்வு பெற்றனர். குத்துச்சண்டையில் 10 மாணவர்கள், சிலம்பம் மற்றும் தடகளத்தில் 4 பேர், நீச்சல், டேக்வாண்டோ, மிதிவண்டி போட்டியில் 5 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

  மாநில போட்டிகளுக்குத் தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ஜா. பீட்டர் ராஜேந்திரன், உள் விடுதித் தந்தை பெலவேந்திரன், விடுதித் தந்தை சார்லஸ் எடிசன்

  மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், நிர்வாகிகள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai