சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

  மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்பட்ட உதவித்தொகை, எந்தவிதமான காரணமும் இல்லாமல் பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும், அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி துறை அலுவலகம் மூலம் மாத உதவித்தொகையை வழங்கிட வேண்டும், மாதம் ஒருமுறை மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இக் கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோ.மாதவன் தலைமையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

  இதில், மாவட்டத் தலைவர் ஜெ. ராஜா, துணைத் தலைவர்கள் ஆர். ஆளவந்தார், ஆர். தட்சணாமூர்த்தி, இணைச் செயலர்கள் பி. முருகையன், ஜெ.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai