சுடச்சுட

    

    மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி

    By கடலூர்  |   Published on : 09th December 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

    திட்டக்குடியை அடுத்த சின்னகொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல் (65). இவர் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி வயலுக்குச் சென்றிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து

    ரூ.1 லட்சம் வழங்க ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, திட்டக்குடி வட்டாட்சியர் தேவநாதன் உயிரிழந்த ஜோதிவேலின் மனைவி மதியழகியிடம் காசோலையை வழங்கினார். மண்டல துணை

    வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சிவகங்கை ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai