சுடச்சுட

  

  அஞ்சலையம்மாளுக்கு  நினைவுச் சின்னம்  எம்எல்ஏ கோரிக்கை

  By  கடலூர்,  |   Published on : 10th December 2014 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதந்திரப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டு என சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வெள்ளையரது ஆட்சியை எதிர்த்து போராடியவர்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
   1890-ம் ஆண்டில் பிறந்த இவர் 1921-ம் ஆண்டு தனது 31-வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் முதல் சுதந்திரப் போராளி என பெருமை பெற்றார்.
   1927-ம் ஆண்டு சென்னையில் நடந்த வெள்ளைய அதிகாரி கர்னல் நீல் என்பரது சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
   1929ம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில் இவர் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் நாடு விடுதலை பெற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் கடலூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்
   பட்டார்.
   அஞ்சலையம்மாள் தியாகத்தை நினைவு கூரும் வகையிலும், அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பாடமாக அமைந்திடும் வகையிலும் கடலூர் நகரில் மணிமண்டபம் அல்லது நினைவுச் சின்னம் அமைத்திடவும், கடலூரில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப் பாதைக்கு அவரது பெயரை சூட்டவும், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்றும் கடலூரில் அவரது பெயரில் விருதுகள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் தெரிவித்
   துள்ளார். இந்த கோரிக்கை அடங்கிய மனு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai