சுடச்சுட

  

  ஏலச் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.45 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
   சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கு.பாலா என்ற பாலசுப்பிரமணியன் (38). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிளம்பராக பணியாற்றிய இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டார்.
   இவர், அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடமிருந்து ரூ.45 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த 56 பேர் கடலூர் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் மீது துணைக் கண்காணிப்பாளர் ஜேசுராஜன், ஆய்வாளர் இளவரசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், பாலசுப்பிரமணியனை செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூர் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயராஜ், குற்றஞ்சாட்டப்பட்ட பாலாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai