சுடச்சுட

  

  கடலூர் நகராட்சிப் பகுதியில் சேதமடைந்த காந்தி சிலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   கடலூர் நகராட்சி 33-வது வார்டு பகுதிக்கு உள்பட்டது வசந்தராயன்பாளையம். கேப்பர்மலை சாலையில் 32 மற்றும் 33-வது வார்டுகளை பிரிக்கும் வகையில் ஒரு சிறிய அளவிலான பூங்கா அமைந்துள்ளது.
   அப்பூங்காவில் மோகன்தாஸ் காந்தி வாலிபர் சங்கம் சார்பில் 12-2-1948-ம் ஆண்டு மகாத்மா காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. நின்ற நிலையில் கையில் ஊன்று கோலுடன் நிற்கும் காந்தி சிலையின் மேலே சிறிய அளவிலான மண்டபமும் அமைந்துள்ளது. சிலை அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றிலும் சிறிய அளவிலான பூங்காவும் உள்ளது.
   ஆனால், தற்போது காந்தியின் கைப்பகுதி உடைந்தும், ஊன்று கோல் இல்லாமலும் சிலை காட்சியளிக்கிறது. அதேபோன்று, பூங்கா என்று சொல்வதற்கு அத்தாட்சியாக அங்கு ஒரு சிறிய செடி கூட இல்லாத நிலையே உள்ளது.
   இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், காந்தி சிலை அமைக்கப்பட்ட பின்னர் அதனை நகராட்சியினர் நிர்வகித்து வருகின்றனர். தற்போது கை உடைந்த நிலையில் உள்ள காந்தி சிலையை செப்பனிடுவதோடு, பூங்காவையும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிலைக்கு அருகே மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதுவும் இல்லை. எனவே, மின்விளக்கு அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai