சுடச்சுட

  

  திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
   திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்குக்கானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் ரெங்கசுரேந்தர் மனு அளித்தார். அதில், கோயிலுக்குச் சொந்தமான திருக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக வளாகம், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, திருக்குள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai