சுடச்சுட

  

  கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 68-வது பிறந்த நாள் விழா சிதம்பரம் காந்திசிலை அருகே கேக் வெட்டி, கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
   விழாவுக்கு முன்னாள் மாநில சேவாதள அமைப்பாளர் எம்.என்.விஜயசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் ஆர்.சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் ஆர்.ஜெகநாதன், எம்.அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்பிக்கள் கே.எஸ்.அழகிரி, பி.பி.கே கலியபெருமாள் ஆகியோர் பங்கேற்று கேக் வெட்டி, காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். விழாவில் ஏ.நூர்அலி, பி.பி.கே.சித்தார்த்தன், ஆர்.ஜே.புவனேஷ், கட்டாரி சந்திரசேகரன் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai