Enable Javscript for better performance
நல்லாத்தூரில் 20-ல் மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நல்லாத்தூரில் 20-ல் மனுநீதி நாள் முகாம்

    By  கடலூர்,  |   Published on : 10th December 2014 11:16 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் வட்டம், ரெட்டிச்சாவடி குறுவட்டம், நல்லாத்தூர் கிராமத்தில் டிசம்பர் 20-ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.
     இது தொடர்பாக நல்லாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து புதன்கிழமை (டிச.10) மனுக்கள் பெறப்படும். கோட்டாட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார்கள்.
     பெறப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் மற்றும் கோரிக்கைகளுக்கான பதில் மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும், மனுநீதி நாளன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாயத் திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையினர் செய்து காண்பிக்க உள்ளனர்.
     எனவே, மேற்கண்ட கிராம பொதுமக்கள் அவர்களது குறைகளுக்கான மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி பயனடையலாம் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai