சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   மகாகவி பாரதியாரின் 132-வது பிறந்த நாள் வரும் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விருத்தாசலத்தில், திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை சார்பில், பாரதியார் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
   கூட்டத்தில், பேரவை அமைப்பாளர் ஓவியர் மோகன் வரவேற்றார். வழக்குரைஞர் பூமாலை குமாரசாமி முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் சந்திரசேகரன் தலைமை வகித்து பாரதியார் குறித்து சிறப்புரையாற்றினார்.
   நிகழ்ச்சியில், கவிஞர் செங்குட்டுவன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி, கவிஞர் அரங்கநாதன், ஓவியர் ராஜேந்திரன், பிரபுபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai