சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் கடலூர் மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   கடந்த 10 மாதங்களாக நிலுவையில் உள்ள 7 சதவீத பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண்டருக்கான நிலுவை, வருங்கால வைப்பு நிதியின் கீழ் வழங்கப்படும் கடன், ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
   கடந்த 2-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கடலூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற 626 தொழிலாளர்களின் வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளதை நிர்வாகம் ரத்து செய்து ஊதியம் வழங்க வேண்டும்.
   கடலூரிலிருந்து விருத்தாசலத்துக்கு மாற்றப்பட்ட வாகன தகுதிச் சான்று புதுப்பித்தல் பிரிவை மீண்டும் கடலூருக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) கடலூர் மண்டல அலுவலத்தில் பொதுமேலாளரை முற்றுகையிட்டு குரல் எழுப்பினர்.
   இதனைத் தொடர்ந்து பொதுமேலாளர் கருணாநிதியை தொமுச தலைவர் பி.பழனிவேல் தலைமையில் பொருளர் பாலசெந்தில்நாதன், சிஐடியு தலைவர் ஜி.பாஸ்கரன், பொதுச்செயலர் எம்.முத்துக்குமரன், பா.தொ.ச. தலைவர் டி.ஜெயசங்கர், பொதுச்செயலர் வீரமணி, ம.தொ.ச. பொதுச்செயலர் இரா.மணிமாறன், துணைத் தலைவர் முத்துசரவணன், தொ.வி.மு. துணைத் தலைவர் கருணாநிதி, தே.மு.தொ.ச. துணைப் பொதுச்செயலர் டி.ஆர்.தண்டபாணி, ஐஎன்டியுசி பொதுச்செயலர் பி.சுவாமிநாதன், தொமுச நிர்வாக பணியாளர் சங்க பொதுச்செயலர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai