சுடச்சுட

  

  கடலூரில் மணல் கடத்திய 7 லாரிகளுக்கு அபராதம் விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
   தமிழக பகுதிகளில் இருந்து உரிய அனுமதியில்லாமல் புதுச்சேரி பகுதிக்கு மணல் ஏற்றிச் செல்வதாக கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளாவுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திங்கள்கிழமை கடலூர் குண்டுசாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து உரிய அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த 7 லாரிகளை கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார். பின்னர், லாரிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai