சுடச்சுட

  

  மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பி.தண்டபாணி தலைமையில் குறிஞ்சிப்பாடியில் திங்கள்கிழமை இரவு பிரசார இயக்கம் நடைபெற்றது.
   இதில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் மட்டும் என்பதை திரும்பப் பெற்று, அனைத்து ஒன்றியங்களிலும் அமல்படுத்த வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்துத்துவா கொள்கைகளை அனைத்துத் துறைகளில் திணிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், வட்டச் செயலர் எஸ்.எஸ்.ராஜ், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சிவகாமி, நகரச் செயலர் எம்.மணி, வடலூர் நகரச் செயலர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai