சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகளின்  பெற்றோருக்குப் பயிற்சி

  By  சிதம்பரம்,  |   Published on : 10th December 2014 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி மற்றும் குமராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோருக்கான ஒருநாள் பயிற்சி முகாம் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை குமராட்சி வட்டார வள மைய (பொறுப்பு) மேற்பார்வையாளர் ரா.பாலமுருகன் தொடங்கி வைத்துப் பேசினார். தலைமை ஆசிரியை வாசுகி முன்னிலை வகித்தார்.
   குமராட்சி ஒன்றிய சுகாதார ஆய்வாளர் எம்.கருணாநிதி மூளைக் காய்ச்சல் நோய் தாக்குதல், அந்நோயை தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
   மாற்றுத் திறன் மாணவர்களின் பெற்றோர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.
   குமராட்சி ஒன்றிய சிறப்பாசிரியர்கள் புவனேஸ்வரி, கவிதா மற்றும் ஜெயசீலன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு பயிற்சி அளித்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai