சுடச்சுட

    

    கடலூரைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆர்வலரான பூனம்சந்த் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியுள்ளார்,
     கடலூர் மாவட்டத்தில் யாருடைய வீடு, பள்ளி, அலுவலகங்களில் பாம்புகள் புகுந்தாலும் அடுத்த நிமிடம் பூனம்சந்துக்குத்தான் அழைப்பு வரும். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டு விடுவார் இதற்கு பணம் வாங்க மாட்டார்.
     அண்மையில் அதிக விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளார். கடலூர் துறைமுகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கிருந்த 2 பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப் பகுதிக்குள் விட்டார். பூனம்சந்த் மீண்டும் தனது பணியைத் தொடங்கியிருப்பது சமூக ஆர்வலர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai