சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே திட்டப் பணிகள் விவர அறிக்கையை தாக்கல் செய்யாத ஒன்றிய பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
   ஊரக வளர்ச்சித் துறை முகமை இயக்குநர் பாஸ்கரன் கடந்த சனிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு நடத்தினார்.
   அப்போது, ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் தானே
   வீடு கட்டும் திட்டம், பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வீட்டு கட்டுமானப் பணிகள், வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொறியாளர்களின் செயல் திறன் மற்றும் அவர்களின் பணி தொடர்பான அறிக்கைகளை ஆய்வு செய்தார்.
   இதில், பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஜெய்சங்கர் முகாம் சென்ற விவரங்களின் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
   இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து இயக்குநர்
   உத்தரவிட்டார். இந்தத் தகவலை
   ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai