சுடச்சுட

  

  தமிழகத்தில் நடைபெற்று வரும் கெüரவக் கொலைகளைக் கண்டித்தும், தீண்டாமை, வன்கொடுமைகளை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடலூரில் பொதுநல அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் கடலூர் மாவட்டக் குழு சார்பில், அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் பி.வெங்கடேசன், பொருளர் பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   ஆர்ப்பாட்டத்தில் காதலுக்கு எதிராக செயல்பட்டு கெüரவக் கொலைகளில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமை, வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி குரல் எழுப்பப்பட்டது.
   அரசுப் பணியாளர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலர் கு.பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன், என்எஃப்டிஇ சம்மேளனச் செயலர் ஜி.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   இயக்கத்தின் மாவட்டச் செயலர் ஏ.கே.சுப்பிரமணியன் வரவேற்றார். செய்தித் தொடர்பாளர் சி.கே.ராஜன் நன்றி
   கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai