சுடச்சுட

  

  அகில இந்திய கன்சல்டிங் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேஷன் சிதம்பரம் மையம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
   சிதம்பரம் மையத்தின் நிறுவனத் தலைவராக பேராசிரியர் எம்.புருஷோத்தமனுக்கு அகில இந்திய தலைவர் பி.சூரியபிரகாஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து செயலராக ஏ.ஆர்.மனோகரன், பொருளாளராக ஆர்.செல்வராஜன் ஆகியோர் பொறுப்பேற்றனர். செயற்குழு உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.கிருஷ்ணசாமி, கே.பாலசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
   விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் கானூர் கே.பாலசுந்தரம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். விழாவின் ஒரு பகுதியாக கான்கிரீட் தொழில்நுட்பத்தின் புதுமைகள் என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேராசிரியர்கள், மாணவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர்
   பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai