சுடச்சுட

  

  நாய்த் தொல்லையால் திட்டக்குடி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   திட்டக்குடி பேரூராட்சியில் சுமார் 25,000 பேர் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிலையம், முக்கிய வீதிகள், சாலைகளில் சுற்றித் திரியும் நாள்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நாய்கள் கூட்டமாக சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், நாய்கள் வேகமாக சாலையில் ஓடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
   இரவு நேரங்களில் தெருக்களில் தனியாகச் செல்லும் பொதுமக்களை விரட்டிக் கடிக்கின்றன.
   இப் பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாய்களுக்கு கருத்தடை செய்த போதிலும் அண்மைக் காலமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
   எனவே, பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் நடவடிக்கை எடுத்து நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai