சுடச்சுட

  

  பணிப் பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் போராட்டம்

  By  கடலூர்/சிதம்பரம்,  |   Published on : 11th December 2014 01:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்டத்தில் ஆசிரியர்கள் புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
   அண்மைக் காலமாக வகுப்பறையில் ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும்.
   மாணவர்களை ஒழுங்குப்படுத்தும் விதமாக அரசு உரிய ஆய்வு செய்து ஒழுக்க நெறிகளை போதிக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ளவும் வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
   மாவட்டத்தில் உள்ள 400 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 3500 ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துப் பள்ளிகள் முன் ஆசிரியர்கள் வாயிற் கூட்டத்தை நடத்தினர்.
   சிதம்பரம்
   சிதம்பரம் அருகே உள்ள வல்லத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வாயிற் கூட்டம் நடைபெற்றது.
   கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சு.நகுலன், அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், தமிழக பட்டதாரி ஆசிரியர் கழக சிதம்பரம் வட்டத் தலைவர் ஏ.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாயில் கூட்டத்தில் முதுநிலை ஆசிரியர் டி.பாண்டித்துரை, பட்டதாரி ஆசிரியர் கே.தங்கசாமி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   நந்தனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆசிரியர்கள் எஸ்.திருவேங்கடம், எம்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   பண்ருட்டி
   பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாயிலில் ஆசிரியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
   உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முதுநிலை ஆசிரியர் பேசில்ராஜ் தலைமை வகித்தார்.
   தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலர் ஜெ.பாலசந்தர் விளக்கவுரையாற்றினார்.
   விருத்தாசலம்
   விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
   ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், பள்ளி முடிந்ததும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி முகப்பு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டதுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டப் பொருளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் கந்தகிரிவாசன், கலையரசி, ராஜராஜசோழன், ரங்கராஜ், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai