சுடச்சுட

  

  ஆந்திரத்தில் தமிழக பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடலூரில் பத்திரிகையாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   இலங்கை அதிபர் ராஜபட்ச புதன்கிழமை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அமைப்புகள், கட்சியினர் திருப்பதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை படம் பிடித்த தமிழக பத்திரிகையாளர்களை ஆந்திர மாநில போலீஸார் தாக்கியதாகத் தெரிகிறது.
   இதனைக் கண்டித்தும், தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்ட போலீஸார் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு நாடு முழுவதும் உரிய பாதுகாப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai