சுடச்சுட

  

  சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி நிறுவனர் செ.ரத்தினசாமி செட்டியார் பிறந்தநாள் விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   விழாவுக்கு பள்ளி நிர்வாகக் குழு துணைத் தலைவர் ரத்தின.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர் வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் தங்க.ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
   மாணவர்கள் பங்கேற்ற ஆன்மிக நாடகம், பரதநாட்டியம், குழு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் வி.முத்துக்குமரன் நன்றி கூறினார்.
   விழாவுக்கான ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் டி.சுவாமிநாதன், ஆசிரியர்கள் மு.சிவகுரு, டி.சுந்தரி, எஸ்.லலிதா, மு.கல்யாணராமன், பிரதீப்குமார், வெங்கடேசன், ராமநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai