சுடச்சுட

  

  சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்தில் பிளஸ்-2 பயிலும் 252 மாணவ, மாணவிகளும், 232 பெற்றோர்களும் பங்கேற்றனர். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.அன்பழகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜி.தமிழரசன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் மு.பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.
   அவர் பேசுகையில், மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல், எழுதிப்பார்க்க வேண்டும் என்றும், மாணவர்களின் தேர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.
   முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் கு.சீனி பங்கேற்று, மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற கருத்துகளையும், வழிமுறைகளையும் கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai