சுடச்சுட

  

  பேராசிரியை இடமாற்றம் விவகாரம்:  ஆட்சியரிடம் மாணவிகள் மனு

  By  கடலூர்,  |   Published on : 11th December 2014 01:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் மகளிர் கல்லூரி பேராசிரியை இடமாற்ற விவகாரம் தொடர்பாக மாணவிகள் புதன்கிழமை ஊர்வலமாகச் சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
   கடலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரிப் பேராசிரியை பி.சாந்தி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு அக் கல்லூரி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்நிலையில், கல்லூரியில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேட்டை தடுத்து நிறுத்த வேண்டும், மாணவிகள் நலனுக்கு எதிராக செயல்படும் கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும், பேராசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கல்லூரி மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கடலூரில் ஊர்வலம் சென்றனர்.
   அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய ஊர்வலத்துக்கு மாவட்டத் தலைவர் டி.அரசன் தலைமை வகித்தார். எம்.ராம்குமார், எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், ஊர்வலமாகச் சென்றவர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai