சுடச்சுட

  

  கடலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் ஆசிரியை இறந்தார். அவரது கணவர், மகள் பலத்த காயமடைந்தனர்.
   புதுச்சேரி குருவிநத்தத்தைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் (39). இவரது மனைவி அபிராமி (38), அரியாங்குப்பத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
   புதன்கிழமை காலை தெய்வநாயகம், மனைவி அபிராமி, மகள் நித்யஸ்ரீ (4) உடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
   சின்னகங்கனாங்குப்பம் அருகே செல்லும்போது குறுக்கே புகுந்த நாய் மீது மோதாமலிருக்க மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
   இதில், அபிராமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தெய்வநாயகம், நித்யஸ்ரீ ஆகியோர் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai