சுடச்சுட

  

  போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி  சொத்தை விற்க முயற்சி: 3 பேர் கைது

  By  சிதம்பரம்,  |   Published on : 11th December 2014 01:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்து விற்க முயன்ற மூன்று பேரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
   புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், பொன்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ்.பி. கிருஷ்ணன். இவருடைய மகன் சேதுராமன் (42), கட்டடப் பொறியாளராக மதுரையில் பணியாற்றுகிறார்.
   எஸ்.பி.கிருஷ்ணனுக்குச் சொந்தமான ரூ. ஒன்றே முக்கால் கோடி மதிப்பிலான கட்டடம் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளைத் தெருவில் உள்ளது. இந்தக் கட்டடத்தை சேதுராமனின் உறவினர்களான கோவையைச் சேர்ந்த தில்லைமணி (64), அவருடைய சகோதரிகள் கல்யாணிதேவி, மீனாள் ஆகியோர் போலியான வாரிசுச் சான்றிதழ் தயாரித்து, வேறொருவருக்கு விற்க முயன்றுள்ளனர்.
   போலி ஆவணம் தயாரிக்க சிதம்பரம் அருகேயுள்ள பழையநல்லூரைச் சேர்ந்த இளவரசன் (45) மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கச்சாமி (55) ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
   இதுகுறித்து, சேதுராமன் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தில்லைமணி, இளவரசன், தங்கச்சாமி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், கல்யாணிதேவி, மீனாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai