Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

    By  கடலூர்,  |   Published on : 11th December 2014 01:18 PM  |   அ+அ அ-   |    |  

    கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்துக்கு வட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், காமராஜ், அன்பழகன், வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai