சுடச்சுட

    

    லாரியில் அனுப்பிய  ரூ.20 லட்சம் முந்திரி பருப்பு மாயம்

    By  பண்ருட்டி,  |   Published on : 11th December 2014 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு லாரியில் அனுப்பிய சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான முந்திரி பருப்பு மாயமானது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் முந்திரி ஏற்றுமதியாளர் பாரதிதாசன் (50). இவர், கடந்த 14.11.2014 அன்று சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 370 டின் முந்திரிப் பருப்புகளை லாரியில் ஏற்றி சென்னை லிங்கிச் செட்டி தெருவில் உள்ள ஒரு ஏஜென்டுக்கு அனுப்பியுள்ளார்.
     ஆனால், முந்திரிப் பருப்புகள் உரிய இடத்துக்குச் சென்று சேரவில்லை எனத் தெரிய வருகிறது.
     இதுகுறித்து, பாரதிதாசன் சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அமர்நாத், ஓட்டுநர் குமார் ஆகியோர் மீது காடாம்புலியூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆய்வாளர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai