சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம் ராமநத்தம் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
   திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.தங்கராசு (46), விவசாயி. கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். போலீஸார் விசாரணையில் தங்கராசு மனைவி பரமேஸ்வரி, அவரது காதலன் கோனூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கூலிப் படையை ஏவி தங்கராசுவை கொலை செய்தது தெரியவந்தது.
   இதையடுத்து, தனிப்படை போலீஸார் பரமேஸ்வரி, ரவிச்சந்திரன், கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கடலூர் பாதிரிகுப்பத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்தி (29) என்பவரை டெல்டா படை உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து ராமநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
   இதையடுத்து கார்த்தி திட்டக்குடி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai