சுடச்சுட

  

  கடலூரில் பாரதியார் பிறந்த தின விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

  மகாகவி பாரதியாரின் 133-வது பிறந்த நாளையொட்டி அவர் அடைக்கப்பட்டிருந்த கடலூர் மத்திய சிறையில் வியாழக்கிழமை விழா கொண்டாடப்பட்டது. சிறை வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சிறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், கூடுதல் கண்காணிப்பாளர் ம.ஆண்டாள் மற்றும் சிறைத்துறையினர் பங்கேற்றனர்.

  கடலூர் துறைமுகம் (தெற்கு) நூலகத்தில் ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் இரா.முத்துக்குமரனார் தலைமையில் பாரதியார் பிறந்த தின விழா நடைபெற்றது. முன்னாள் உதவி ஆட்சியர் த.ராஜேந்திரன், பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இதில், பாரதியார் பாடல் ஒப்புவிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றும் நகராட்சி மேற்பார்வையாளர்கள் முத்து, தண்டபாணி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

  நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவர் வி.ராமலிங்கம், தமிழ்நாடு லோக்பால் அமைப்பின் பொதுச்செயலர் ராஜ.அப்பாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மு.சந்திரசேகரன் வரவேற்க, இ.இளங்கோவன் நன்றி கூறினார்.

  கடலூர் புதுப்பாளையம் துர்க்கா தனிப்பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் கி.செந்தில்முருகன் தலைமை வகித்தார். பாரதிதாசன் இலக்கிய மன்ற மாவட்டத்தலைவர் கவிஞர் கடல்நாகராசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சுதந்திர போராட்டத்தில் பாரதியார் வரலாறு குறித்து பேசினார். நகராட்சி உறுப்பினர் பா.சங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு பாரதியார் வாழ்க்கை வரலாறு நூல் வழங்கினார். ஆசிரியர் இஸ்ரேல், சங்கீதாசெந்தில், குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் பிரஸ் கிளப்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai