சுடச்சுட

    

    கல்லூரி பேராசிரியர் விவகாரம்: மாணவிகள், பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

    By கடலூர்,  |   Published on : 12th December 2014 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் சி.கந்தசாமிநாயுடு கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் கடலூரில் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேராசிரியர் பி.சாந்தியை அறக்கட்டளை நிர்வாகம் அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்தது. இதனைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஊர்வலமாகச் சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பேராசிரியருக்கு ஆதரவாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர் நலனுக்காக குரல்கொடுக்கும் பேராசிரியரை ஆட்சிமன்றக் குழுவிலிருந்து நீக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், தற்போதைய கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai