சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டுக்கழக ஊழியர்கள் கடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  காப்பீட்டு சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் விவாவதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்தும், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்துவதை எதிர்த்தும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். செயலர் வெங்கடேசன் மசோதாவை கண்டித்து பேசினார். எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி வெங்கடேசன், எல்ஐசி ஊழியர்கள் எஸ்சி, எஸ்டி நலச்சங்கத்தின் அறிவுக்கரசு, பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க நிர்வாகி பால்கி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

  1956-ம் ஆண்டு ரூ.5 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட காப்பீட்டுக்கழகம் இன்று ரூ.17.69 லட்சம் கோடியுடன் உலகின் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மொத்தம் 41.50 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட நிறுவனமாக எல்ஐசி செயல்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பால் பொதுமக்களுக்கு பலன் இல்லை என்பதால் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாதென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai