சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடியில் அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும்: இந்திய குடியரசு கட்சி

  By கடலூர்,  |   Published on : 12th December 2014 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்டு மூடப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலையை விரைந்து திறக்க வேண்டுமென இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.

  இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தின கொடியேற்று விழா, கட்சி செயற்குழு கூட்டம் ஆகியவை வடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பால.வீரவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கே.ஜெயமணி, அமைப்புச் செயலர் வீர.ஆனந்தராஜ், கொள்கை பரப்புச்செயலர் பி.விஸ்வநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாநில இளைஞரணி செயலர் கே.மங்காபிள்ளை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

  கூட்டத்தில், கொல்லிருப்பு கிராமத்தில் வீடு எரிக்கப்பட்ட 7 தலித்துகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். டிச.27-ம் தேதி கடலூரில் அம்பேத்கர் நினைவு தின பொதுக்கூட்டம் நடத்தி கட்சி மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசனை வரவழைப்பது, தலித் விகிதாசார அடிப்படையில் பண்ருட்டி அல்லது கடலூர் சட்டமன்றத்தை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். நகராட்சிகளில் துப்புரவு பணியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாவட்டச் செயலர் கே.மணிமாறன் வரவேற்க, துணைத்தலைவர் ஏ.லூக்காஸ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai