Enable Javscript for better performance
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி- Dinamani

சுடச்சுட

    

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி

    By கடலூர்,  |   Published on : 12th December 2014 11:30 AM  |   அ+அ அ-   |    |  

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒன்றிய தலைவர் ராசமுருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தங்கம்சிகாமணி, பொருளர் கே.எஸ்.ராமு, நகர தலைவர் கே.மாயவன், மகளிரணி நகர தலைவர் காளியம்மாள் முன்னிலை வகித்தனர்.

    மாநில மகளிரணி செயலர் டி.எஸ்.பிரேமலதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆந்திராவில் தமிழ் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாயாவதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் பேசினார்.

    கூட்டத்தில், மத்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், மண்ணெண்ணைக்கான மானியத்தை தடை செய்யக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஒன்றிய இளைஞரணி செயலர் விமல் வரவேற்றார். நகர செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai