சுடச்சுட

  

  மது குடிக்க பணம் கிடைக்காத விரக்தியில் இளைஞர் சாவு

  By கடலூர்,  |   Published on : 12th December 2014 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேப்பூர் அருகே மது குடிக்க பணம் தராததால் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

  வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் முத்துக்கருப்பன் (22), மதுப்பழக்கம் உள்ளவர். இவர் கடந்த 9-ம் தேதி மது குடிப்பதற்கு பணம் இல்லாத விரக்தியில் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.

   பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முத்துக்கருப்பன் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி முத்துகருப்பன் வியாழக்கிழமை இறந்தார்.

  இது குறித்து அவரது உறவினர் துரைசாமி அளித்த புகாரின் பேரில் வேப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் சுப்புராயுலு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai