சுடச்சுட

  

  யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் வீடு, வீடாக வழங்கப்படும்: ஆட்சியர்

  By கடலூர்,  |   Published on : 12th December 2014 11:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் வீடு, வீடாகச் சென்று வழங்கப்படும் என்றார் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்.

  கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் யானைக்கால் நோய் ஒழிப்பு தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: யானைக்கால் நோய் பைலேரியா என்ற புழுக்கள் மூலமாக ஏற்படுகின்றது. யானைக்கால் நோயின் அறிகுறிகள் நெறிகட்டி காய்ச்சல் மற்றும் கால்களில் லேசான வீக்கம் ஏற்பட்டு சிறிது சிறிதாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகப் பெரியதாகுதல் ஆகியவையாகும். யாருடைய உடலிலும் மைக்ரோ பைலேரியா ஒட்டுண்ணி இருப்பது வெளித்தோற்றத்தில் தெரியாது. எனவே, அனைவரும் டி.இ.சி. மாத்திரைகளை உட்கொள்ளும் பொழுது இந்த ஒட்டுண்ணிகளை முழுவதுமாக அழிக்கலாம்.

  இதற்காக, கடலூர் மாவட்டத்தில் டிஇசி மற்றும் அல்பெண்டோசோல் மாத்திரைகள் டிச.14-ம் தேதி முதல் வீடுவீடாகச் சென்ற வழங்க வேண்டும். இம்மாத்திரைகள் 2 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும்.

   இத்திட்டத்தின் கீழ் 12.50 லட்சம் ஆண்கள், 11.90 லட்சம் பெண்களுக்கு வீடுகள் தோறும் சென்று பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள்

  சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மொத்தம் 10,523 நபர்கள் மூலமாக 1052 மேற்பார்வையாளர்களின் கண்காணிப்பில் இம்மாத்திரைகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

  இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முதலில் பரிசோதனை அடிப்படையில் 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் மூலம் இம்மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக புதியதாக யானைக்கால் நோய் கண்டவர்கள் யாரும் இல்லை.

  இந்த மாத்திரையை உணவு உட்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள், நீண்ட நாள் நோயுற்றோர், 2 வயதிற்கு குறைவானோர், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இம்மாத்திரை வழங்கப்பட மாட்டாது.

   எனவே பொதுமக்கள் அனைவரும் யானைக்கால் நோயை ஒழிக்க டிஇசி மற்றும்

  அல்பெண்டோசோல் மாத்திரையை உட்கொண்டு பயனடைய வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

   இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவம் ச.வித்யாசங்கர், துணை இயக்குநர்

  சுகாதாரப் பணிகள் ஜவகர்லால், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை

  அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai