சுடச்சுட

  

  வரக்கால்பட்டு பள்ளியில் மின்சார விழிப்புணர்வு கூட்டம்

  By கடலூர்  |   Published on : 12th December 2014 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் வரக்கால்பட்டு பள்ளியில் மின்சார விழிப்புணர்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

  தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லிக்குப்பம் கோட்டம் சார்பில் வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயா தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சி.பழனிராஜூ, உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.ராமலிங்கம், கே.சரவணதுரைமோகன் ஆகியோர் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து பேசினர்.

  மேலும், மின்சிக்கனம் குறித்து நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்வில், உதவி மின் பொறியாளர்கள் ஜி.பிரபு, டி.குமாரவேல், வி.பாரதிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai