சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

  வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களில் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரையில் பணிபுரியும் அலுவலர்களின் நலனுக்காக பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

  இதில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம், தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கம் ஆகியவை அலுவலர்களின் பணி இடர்பாடுகளை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் ஒரே சங்கமாக செயல்பட முடிவு செய்தன.

  அதன்படி இச்சங்கங்கள் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தலைவர் சு.எழிலன், செயலர் எஸ்.சிவா, பொருளர் அ.பலராமன், துணைத்தலைவர்கள் பா.மகேஷ், ஜெ.ரவிச்சந்திரன், ஆர்.சையது அபுதாஹூர், டி.மணிவண்ணன், இணை செயலர்கள் சா.கீதா, ஆர்.ஸ்ரீதரன், ஜெ.ஜான்சிராணி, வே.உதயகுமார், மத்திய செயற்குழு உறுப்பினர் ரா.ரெத்தினக்குமரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai