சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட விதைப்பண்ணை மற்றும் விதைகளின் தரம் குறித்து கோவை விதைச்சான்று இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  கடலூர் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான ஆதாரநிலை, சான்று நிலை விதைகள் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் மூலம் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த விதைகள் விதைச்சான்று துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் எம்.ராதாகிருஷ்ணன் அண்மையில் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

  பண்ருட்டி வட்டாரம் ஏரிபாளையம் கிராமத்தில் விவசாயி தாமோதரன் 3 ஏக்கரில் அமைத்திருந்த பி.பி.டி.5204 நெல் விதைப்பண்ணை, மங்களூர் வட்டாரம் கல்லூர் கிராமத்தில் சேதுராமன் அமைத்துள்ள துவரை கோ-7 விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார்.

  அப்போது களை அகற்றி, தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த அறிவுறுத்தினார்.

  ஆய்வின் போது கடலூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் எ.தனசேகர், விதைச்சான்று அலுவலர்கள் நடனசபாபதி, ராதாகிருஷ்ணன், ஜெயஸ்ரீ உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai