சுடச்சுட

  

  அம்பேத்கர் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைக்கக் கூடாது

  By dn  |   Published on : 13th December 2014 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  இதுகுறித்து கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

  கடலூர் தபால் நிலையம் அருகில் அம்பேத்கர் உருவச்சிலை அமைந்துள்ளது. இந்த சிலைக்கு இரும்புக் கூண்டு அமைக்கும் முயற்சியில் கடலூர் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இச்சிலை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருப்பதோடு, ஆட்சியரின் முகாம் அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது.

  மேலும், அம்பேத்கர் சிலைக்கு அருகிலேயே பல தேசிய தலைவர்களின் சிலைகளும் உள்ளன. ஆனால், அம்பேத்கர் சிலைக்கு மட்டும் கூண்டு அமைக்கும் முயற்சிப்பது சரியல்ல.

  எனவே அம்பேத்கர் சிலைக்கு கூண்டு அமைக்கும் முயற்சியை கைவிட நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai