சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து ஊராட்சி கண்ணுத்தோப்பு தெற்குப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.

    வடக்குத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன் இந்த மனுவை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    வடக்குத்து ஊராட்சி கண்ணுதோப்பு தெற்குப் பகுதியில் ஆழ்துளை கிணறு பழுதடைந்து விட்டது. நெய்வேலி சுரங்கத்தில் வெடி வைத்ததால் மண் சரிந்து ஆழ்துளை கிணறு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் சரிவர விநியோகிக்க முடியவில்லை. இதற்கு பதிலாக 8 அங்குலத்தில் 600 அடி ஆழத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யது தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai