சுடச்சுட

  

  தமிழக அரசின் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பம் பெற்று சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய், கூட்டுறவுத் துறையினருக்கு கடலூரில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

  பொதுமக்கள் தங்களுக்கான ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானவரிச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக விண்ணப்பித்து, பல்வேறு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னர் சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனர். இதற்கு பெரும் கால தாமதம் ஏற்படுவதோடு, அலைச்சலுக்கும் உள்ளாக வேண்டியுள்ளது.

  எனவே இச்சான்றிதழ்கள் விரைவாக கிடைத்திடும் வகையில், மாநில அரசு மின் ஆளுமைத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தினை வருவாய்துறை, கூட்டுறவுத் துறையுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது. இதன்படி கூட்டுறவுத் துறை அலுவலகங்களில் இதற்காக திறக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவுகளில் பொதுமக்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து, இச்சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

  இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பம் மற்றும் அதற்கான அத்தாட்சி சான்றுகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களது ஆய்வுக்குப் பின்னர் வட்டாட்சியருக்கு அனுப்பப்படும். அதனை சரிபார்க்கும் வட்டாட்சியர் அனுமதியுடன் சான்றுகள் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

  வருவாய், கூட்டுறவுத் துறைகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய இத்திட்டம் குறித்த பயிற்சி முகாம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பாலாஜி தலைமை வகித்தார்.

  கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா

  பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

  மாவட்ட மேலாளர் யுவபிரியா பயிற்சியளித்தார். இதில், கடலூர் வட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், மண்டல வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் கூட்டுறவுத் துறையினர்

  பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai